கூடுதலாக லக்கேஜ்களுக்கு அபராதம்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      வர்த்தகம்
train 2017 07 01

பயணிகள் தாங்களுடன் கொண்டு வரும் உடைமைகளை கணக்கிட்டு, ரயில்வே நிர்வாகம் கெடுபிடிகள் காட்டப்படுவதில்லை என்பதால், அதிக அளவு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு வருவதாகவும், இதனால் பல நேரங்களில் சக பயணிகள் புகார் தெரிவிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் கூறும் போது,  விமான நிறுவனங்களை போல, பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் லக்கேஜ்களுக்கு முன்கூட்டியே புக் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த லக்கேஜ்கள் லக்கேஜ்வேனில் வைக்கபடும் என்பதுதான் ரயில்வே விதியாகும்.ஆகவே, கட்டணம் செலுத்தாமல் இனி கூடுதலாக லக்கேஜ்களை கொண்டு வந்தால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து