முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நில ஆவணங்களில் கணினி திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது நில ஆவணம் 10(1) சிட்டாவில் கணினி திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாமில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து  கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
   ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்டங்களில் கடந்த 15.05.2018 முதல் 24.05.2018 வரையிலான பணி நாட்களில் துணை ஆட்சியர் நிலை மற்றும் அதற்கு கூடுதலான நிலை அலுவலர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய 1427ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை முகாம் நடைபெற்றது.  இம்முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.  இதில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக அதிகளவிலான மனுக்கள் வரப்பெற்றன.  அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருவாடானை வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய தணிக்கை முகாமில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக 31.05.2018 வரை கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டு அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல திருவாடானை வட்டம் நீங்கலாக மீதமுள்ள 7 வருவாய் வட்டங்களிலும் 05.06.2018 முதல் 07.06.2018 வரையிலான மூன்று தினங்களில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் அல்லது துணை ஆட்சியர் நிலைக்கு கூடுதலான அலுவலர் தலைமையில் நில ஆவணம் 10(1)சிட்டாவில் கணினி திருத்தம் செய்தல் தொடர்பான கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  அதனடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜனிடம் சிட்டாவில் கணினி திருத்தம் தொடர்பான  கோரிக்கை மனுக்களை  பொதுமக்கள் வழங்கினார்கள். இம்முகாமில் பெறப்பட்ட 98 மனுக்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு மனுதாரரிடத்தில் வரிசை எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்பட்டது.  மேலும் இம்முகாமில் பெறப்பட்ட  மனுக்கள் மீது வருவாய் கோட்டாட்சியர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு உடனடி தீர்வு காணப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எனவே  07.06.2018 வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை  பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது நில ஆவணங்களில் உரிய கணினி திருத்தம் மேற்கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுஜிபிரமிளா, வட்டாட்சியர் ராஜேஸ்வரி, நலிந்தோர் உதவித்திட்ட வட்டாட்சியர் கார்த்திகேயன், துணை வட்டாட்சியர்கள் ஜலாலுதின், ராமமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து