முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற சுயம்வரம்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சேலத்தில் சுயம்வரம் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 மாற்றுத்திறனாளிகளுக்கு 16 வகையான சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைத்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி... மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மாற்றுத்திறனாளிகள் மணமக்கள் நன்றி மற்றும் பாராட்டு... சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி பதவியேற்றது முதல் ஏழை எளியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மனுநீதி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தனிப்பட்ட முறையில் விசாரித்து அவர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் ஆன்லைன் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான சுயம்வர நிகழ்ச்சி நடைபெறும் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது இதனடிப்படையில் ஆன்லைன் மூலம் தமிழகம் மட்டுமில்லாது வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் திருமணத்திற்கு இசைவு தெரிவித்து விண்ணப்பம் செய்தனர் இதுபோன்ற விண்ணப்பம் செய்பவர்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு கடந்த மாதம் பிப்ரவரி மாதம் நேர்கானல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 26 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார் இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நன்கொடையாளர்களை அழைத்து அவர்களுக்கு திருமணம் குறித்த விளக்கங்களை எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார் இதனடிப்படையில் 100 க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன்வந்தனர். திருமணத்திற்கு தேவையான தாலி, சீர்வரிசை, பட்டுப்புடவை, உணவு வகைகள் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் கொடுத்து உதவிசெய்தனர் இதன்படி சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வழக்கமான உற்சாகத்துடன் திருமண விழா நடைபெற்றது. 26ஜோடி மாற்றுத் திறனாளிமணமக்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஆகியோர் மாங்கல்யம் எடுத்துகொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து 16 வகையான சீர்வரிசை பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்றார். மேலும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக அவர்களுக்கும் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து மாற்றுத்திறனாளி மணமக்கள் கூறும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவரம் அரசு சார்பில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதும், தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகவும், அதனடிப்படையில் விண்ணபித்த தங்களுக்கு திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதனை தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆட்சியரின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து