பணியாளர்களை நீக்கும் திட்டம் இல்லை: டிசிஎஸ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      வர்த்தகம்
tcs

சாப்ட்வேர் துறை இயந்தரமயமானாலும் பணியாளர்களுக்கான தேவை குறையாது என டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அஜயந்திரா முகர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டில் 20,000 நபர்களை வளாகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தோம்.

இந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் வேலை வாய்ப்பினை வழங்கி இருக்கிறோம். தவிர இதர முறைகளில் 4,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திருக்கிறோம். இயந்திர மயமாக்கல் காரணமாக பணியாளர்களை நீக்கும் திட்டம் இல்லை என்றும் முகர்ஜி கூறினார். 50 நாடுகளில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் 3.94 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து