முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு வெள்ள சேதங்களை தடுக்கும் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மழையினால் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுக்கும் நோக்கத்துடன் செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில் சிறப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  நடைபெற்றது.
  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விவாதிக்கப்பட்டவை:
 வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உள்பட தொடர்புடைய அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்ளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கண்மாய்களை சிறந்த முறையில் பாதுகாக்கவும், கண்மாய்களை சீர்செய்தல், வெள்ள காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு முகாம்கள் அமைத்தல், நெடுஞ்சாலைகளில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சரிபார்த்தல், மருத்துவ வசதி செய்தல், மின் இணைப்புகளை உடனுக்குடன் சரிசெய்தல், மருத்துவ வசதி செய்தல், மின் இணைப்புகளை உடனுக்குடன் சரிபார்த்தல், தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், பொது விநியோக திட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குதல் போன்ற அம்சங்கள் குறித்து கூட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
 மேலும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்தார்.
 இக்கூட்;டத்தில் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர்,  மாவட்ட வருவாய் அலுவலர்  .ரெ.குணாளன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்  எஸ்.பி.அம்ரித், துணை ஆட்சியர் (பயிற்சி)  .கோட்டை குமார் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து