உலக சுற்றுச் சூழல் தினத்தன்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் .ராஜேந்திரன் மரகன்று நட்டு சிறப்பித்தார்.

karikudi alaggappa

காரைக்குடி.- பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.  உலக சுற்றுச் சூழல் தின நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. என்.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்.  இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் ஹெச்.குருமல்லே~; பிரபு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி.சக்திவேல், ஆட்சிக் குழு உறுப்பினர், முனைவர் அ.நாராயண மூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.சீனிவாசன், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள்; ஆகியோர் பங்கேற்றனர்;.  இதன் ஒரு நிகழ்வாக மரக்கன்று நடுவிழா பல்கலைக்கழக கல்வியியல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் துணைவேந்தர் பேரா. என்.ராஜேந்திரன் மரக்கன்று நட்டு சிறப்பித்தார்.  அதனைத் தொடர்ந்து பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர், ஆட்சி குழு உறுப்பினர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச் சூழல் தினத்தினை சிறப்பித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து