முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் உலக கடல் தினத்தை முன்னிட்டு துறைமுக கடற்கரைப்பகுதியில் தூய்மைப்பணி.

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேஸ்வரம் - உலக கடல் தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மைப்பணி நடைபெற்றது.
  உலகளவில் கடல்வளங்களை பாதுகாத்திடும் நோக்கத்தினை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் நாள் உலக கடல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட  மீன்வளத்துறையின் சார்பாக ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் உலக கடல் தினம் கடைபிடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்து அப்பகுதியில்  தூய்மைப் படுத்தும் பணிகளைத் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தொடர்ந்து ராமேசுவரம் நிலைய இந்திய கடற்படை கமாண்டர் ஏ.கே.தாஸ்,ராமநாதபுரம் மாவட்ட  மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன்,ராமேசுவரம் வட்டாட்சியர் அப்துல்ஜபார்,ராமேசுவரம் மீனவ சங்க தலைவர்கள் தேவதாஸ்,போஸ்,எமரிட்,சகாயம்,ஜேசுராஜ உள்பட மீனவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து