முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரிசெய்யும் பணியினை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

மதுரை -மதுரை மாநகராட்சி குடிநீர் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரிசெய்யும் பணியினை துவரிமான், நான்கு வழிச்சாலை சந்திப்பு, கீழமாத்தூர் ஆகிய பகுதிகளில் ஆணையாளர்  அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் இன்று (08.06.2018) ஆய்வு மேற்கொண்டார். 
மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் இரண்டாம் வைகை குடிநீர் திட்டத்தில் வைகை அணை முதல் அரசரடி வரை (எ.வாடிப்பட்டி, கண்ணாப்பட்டி, அக்கரைப்பட்டி, மன்னாடி மங்கலம், முள்ளிப்பள்ளம், கச்சிராயிருப்பு, மேலக்கால், துவரிமான்) ஆகிய இடங்களில் உள்ள   பிரதான குழாய்களில் உடைப்பு (ஆயதழச டுநயமயபநள) மற்றும் கசிவுகள் ஏற்பட்டு குடிநீர் வீணாவது கண்டறியப்பட்டு இன்று ஒரு நாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு வைகை அணை முதல் அரசரடி வரையுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள  கசிவுகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை துவரிமான், நான்கு வழிச் சாலை சந்திப்பு, கீழமாத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர்  ஆய்வு மேற்கொண்டு சரிசெய்யும் பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  அரசு, மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவிப் பொறியாளர்  .பாபு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து