ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018      தேனி
andippati school news

ஆண்டிபட்டி -     ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
        தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தக் கோவில் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1700 மாணவிகள் படித்து வருகின்றனர். 64ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
        கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 95 சதவிகிதமும், 11 ஆம் வகுப்பு தேர்வில் 96 சதவிகிதமும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
       இந்நிலையில் மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும், ஆசிரிய ,ஆசிரியைகளை பாராட்டும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் பள்ளிக்கு திடீர் விஜயம் செய்தார். அப்போது ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவிகளின் கல்வித் திறன் குறித்து கேட்டறிந்தார். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவிகள் பங்குபெற்று வெற்றி பெற வெறும் மனப்பாடம் மட்டுமே போதாது. பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கும் போது, அதனை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். உற்சாகமும், மன உறுதியும், தன்னம்பிக்கையுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
        ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் பள்ளிக்கு சுற்று சுவர், கூடுதல் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து