முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா பதிலடி

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: ஹெலிகாப்டர் பயணத்துக்காக செலவு செய்த ரூ. 12 லட்சத்தை பெரிதுபடுத்துவதா? முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார். 

கர்நாடகா தேர்தலுக்குப் பிறகு கடந்த மே 17-ம் தேதி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா 3 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். அப்போது ஹெலிகாப்டர் பயணத்துக்காக அவர் ரூ.12 லட்சம் அரசு பணத்தை செலவிட்டதாக தற்போதைய முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து எடியூரப்பா பெங்களூருவில் கூறியதாவது: நான் முதல்வராக இருந்தபோது பாகல்கோட்டையில் மகந்த சிவயோகி மடாதிபதி காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றேன். தலைமைச் செயலாளர் ரத்னபிரபா, கூடுதல் தலைமைச் செயலாளர் லட்சுமிநாராயணா ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே ஹெலிகாப்டரில் சென்றேன். முதல்வராக இருந்ததால் எனக்கு இந்த வசதியை செய்து தந்தனர். இதற்கு செலவான ரூ.12 லட்சத்தை வேண்டுமானால் திருப்பிச் செலுத்தி விடுகிறேன். ஒரு முதல்வர் ஹெலிகாப்டரில் சென்றது அவ்வளவு பெரிய குற்றமா? சிறிய விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி அரசியல் செய்வதை விடுத்து குமாரசாமி உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து