முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க அமலாக்கத் துறை கோரிக்கை

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்  பிறப்பிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக ரூ.13,000 கோடி வரை கடன் வாங்கிய நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம், 12,000 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடி மீதும், அவரது தந்தை, மைத்துனர் உள்ளிட்ட உறவினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சல்மான் அஜ்மீ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹிதன் வெனிகான்கர், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்தக் கோரிக்கை தொடர்பாக, வரும் 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து