முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வே எழுதாதவர்களுக்கும் மதிப்பெண்கள் கணிதத்தில் 35க்கு 38 மார்க்: மாணவர்கள் மகிழ்ச்சி

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகாரில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. 35 மதிப்பெண்ணுக்கான கணிதத் தேர்வை மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், தங்களுக்கு அந்த பாடத்தில் 38 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கும் இயற்பியல் பாடத்துக்கு 35க்கு 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ராகுல் குமார் கணிதப் பாடத்தில் 35க்கு 40 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர்களையெல்லாம் விட ஜான்வி சிங் என்ற மாணவிக்கு பயாலஜி பாடத்தில் 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மாணவி, நான் பயாலாஜி தேர்வுக்கு செல்லவேயில்லை என்கிறார். இதே போல, சத்யாகுமாருக்கும், தான் தேர்வெழுதாத பாடங்களுக்கும் தனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ரூபி ராய், தான் படித்த பொலிடிகல் சயின்ஸ் என்ற பாடத்தின் பெயரைக் கூட சரியாக சொல்லத் தெரியாமல், புரோடிகல் சயின்ஸ் என்றும், அதில் சமையல் பற்றி சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் தவறாகக் கூறியது ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து, பிகார் கல்வித் துறை மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து