முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிஞரின் வரிகளை மேற்கோள்காட்டி பொம்மை தின வாழ்த்துக்கள் கூறிய அமைச்சர் ஜெயகுமார்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை என்று பொம்மை தின வாழ்த்துக்கள் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் நேற்று பேட்டியளித்த, அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இன்று(நேற்று) உலக கடல் தினம். உலகின் முதல் உயிரினம் அமீபா, தோன்றியது கடலில்தான். மாசுகட்டுப்பாட்டு வாரியம், கடல் மாசுவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு கடல் தினத்தையொட்டி பல போட்டிகளை நடத்தி வருகிறோம். சுவாசிக்கும் ஆக்சிஜனில் 80 சதவீதம் கடல்தான் கொடுக்கிறது. இது பலருக்கும் தெரியாது.

இன்று(நேற்று) உலக பொம்மைகள் தினம். நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை என்று, கவிஞர் பாடியுள்ளார். இதையே வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் பொம்மைகளாக இல்லாமல், சமூகத்தின் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்பதை வாழ்த்தாக கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தவறான தகவல் என்று, ஜெயக்குமார் தெரிவித்தார். உலக பொம்மை தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2-வது சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து