முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் சதி எதிரொலி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு அதிவிரைவு துப்பாக்கிசூடு வீரர்கள் நியமனம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீசார் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டுகளிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலை தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு படையில் அதிவிரைவில் குறி பார்த்து சுடும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எந்த தாக்குதல்களையும் முறியடிக்க கூடிய திறன் படைத்தவர்கள். எதிரி துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கும் முன் இவர்கள் அவர்களை வீழ்த்தி விடுவார்கள். இவர்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் பிரதமர் மோடி பொது இடங்களுக்கு செல்லும் போது திடீரென்று பாதுகாப்பை மீறி ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். சமீப காலமாக பிரதமர் மோடி இவ்வாறு பல ரோடு ஷோக்கள் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை அடைந்தனர். இதுபோல் திடீர் ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டுபிடிக்க கூடிய நவீன கருவிகளும் பிரதமர் பாதுகாப்புக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து