ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      விளையாட்டு
Womens Asia Cup 2018 6 9

கோலாலம்பூர் : ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

6 அணிகள்...

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் விக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

கடைசி லீக்...

இப்போட்டி தொடரில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் எக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 73 ரன் இலங்கை விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. மிதாலிராஜ், தீப்தி சர்மா டக் அவுட் ஆனார்கள்.

7 விக்கெட்...

அதன்பின் ஜோடி சேர்ந்த மந்தனா- ஹர்மன்பிரித் கவூர் சிறப்பாக விளையாடிய ரன் சேர்த்தனர். மந்தனா 38 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 75 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.

இறுதிப்போட்டி

மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. வங்காளதேசம்- மலேசியா இடையேயான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். ஒரு வேளை வங்காளதேசம் தோல்வி அடைந்தால் 6 புள்ளியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Kolamavu Kokila(CoCo) Movie Review | Nayanthara | Yohi babu | Anirudh | Nelson

World's ugliest pug!! See for yourself!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து