மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்சு குடிமகன் தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      உலகம்
mecca mosque suicide young 2018 6 10

ரியாத் : மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்சு குடிமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. வருடம்தோறும் இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளுவார்கள். முக்கியமாக ரமலான் மாதத்தில் அதிக பேர் பயணம் செய்வார்கள்.

இந்த நிலையில் மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. இவர் தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர் பிரான்சு குடிமகன் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றி வரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து