முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்ற மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவர், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதில், கஜகஸ்தான் அதிபரை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் என்பது 2015-ஆம் ஆண்டு எரிபொருள் பயன்படுத்துதலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட கூட்டமைப்பாகும். மோடியின் இந்த அழைப்புக்கு கஜகஸ்தான் அதிபர் நேர்மறையான பதில் தந்ததாக வெளியுறவுத் துறை செயலாளர் ருச்சி ஞானஷ்யாம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து