முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடராஜர் ஜம்பொன்சிலைகளுடன் சிலைகள் கடத்தப்பட்டதா? நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு -      தமிழகத்தின் மிகப்பெரிய பிரசித்தி பெற்ற பழனி பாலாதண்டாயுதபானி திருக்கோவிலில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டதாக மிகப்பெரிய அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நிலக்கோட்டை தாலுகாவில் பள்ளப்பட்டியை சேர்ந்த கனிக்குமார் (வயது 40) தமிழக அரசுக்கும்,ஜி.ஜீ.பொன்மாணிக்கவேலுக்கும் ஒரு புகார் மனு அனுப்பினார்.அந்த புகாரில் நிலக்கோட்டை நடராஜர் கோவில் கடந்த சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணி செய்வதற்காக 500 ஆண்டுக்களுக்கும் மேலான நடராஜர் ஜம்பொன் சிலை,மாணிக்கவாசகர் சிலை உள்ளிட்ட விநாயகர்,மற்றும் பல்வேறு சிலைகளை பாதுகாப்பு கருதி நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
      அப்படி வைக்கப்பட்ட சிலைகளை கடத்திவிட்டதாகவும்,அதனை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது.இது குறித்து உரிய விசாரணை நடத்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக்கேயனுக்கு உத்தரவிட்டார்.இது சம்மந்தமாக உடனே நிலக்கோட்டை இந்து அறந்நிலைத்துறை அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் நடராஜர் திருக்கோவில் செயல் அலுவலரை அழைத்து கொண்டு நிலக்கோட்டை நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று அங்கு இருந்த பூசாரியை அழைத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜர் கோவில் சிலைகள் எங்கே என்று கேட்டார்.
      அப்போது திடீரென போலீஸ் வந்து கேட்ட பதற்றத்தடன் சாமி சிலைகள் இங்கே இருக்கிறது என்று காண்பித்தார்.இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் உரிய இடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது என பூசாரியும்,செயல் அலுவலர் பூபதியும் விசாரணையில் தெரிவித்தனர்.அப்போது புகார் கொடுத்த தரப்பினர் தற்போது இருக்கும் சிலைகள் உண்மையான ஜம்பொன் சிலை தானா ஆய்வு செய்ய வேண்டும் கோரிக்கை வைத்தனர்.அதற்குரிய அதிகாரிகளை வைத்து ஆய்வு நடத்தப்படும் என போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவகத்திற்கு இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நபர்களை அழைத்து விசாரணை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக்கேயன் விசாரணை நடத்தினார்.
    இந்த ஆய்வின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி,புகார் கொடுத்த
 கனிக்குமார்,இந்து மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் பட்டம்,உள்பட பலர் இருந்தனர்.இதனால் பகுதியில் பரப்பரப்பு  ஏற்ப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து