முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க‌ம் விலை மேலும் உயர வாய்ப்பு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதும் சர்வதேச அரசியல் சூழல்களும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கும் என காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கணித்துள்ளார். மற்ற நிபுணர்களும் தீபாவளிக்குள் தங்கம் விலை சவரணுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் உயர்ந்து வந்தாலும் முதலீட்டாளர்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை என்பது தற்போது தங்கம் விலை நிலவரத்தை பார்க்கும் போது தெரியவருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பருவமழை நன்றாக பெய்யும் என்று கணிப்புகள் இருப்பதால் கிராமப்புற வருவாய் உயர்ந்து தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருட்சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து