முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு எதிராக 42 நாளில் 5 டெஸ்ட் என்பது கேலிக் கூத்தானது - ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்டில் விளையாடும் வகையிலான அட்டவணை தயாரிப்பு கேலிக் கூத்தானது என்று ஆண்டர்சன் கூறியுள்ளார்.

சுற்றுப் பயணம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது. 6-ம் தேதி 2-வது ஆட்டமும், 8-ம் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

டெஸ்ட் தொடர்

ஒருநாள் தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ம் தேதியும், 3-வது ஆட்டம் 17-ம் தேதியும் நடக்கிறது.அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. 1-ம் தேதி டெஸ்டும், 9-ம் தேதி 2-வது டெஸ்டும், 18-ம் தேதி 3-வது டெஸ்டும், 4-வது டெஸ்ட் 30-ம் தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 9-ம் தேதியும் தொடங்குகிறது. ஐந்து டெஸ்டுகளும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரைக்குள் 42 நாட்களில் நடக்கிறது. இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் முழு ஃபிட் உடன் விளையாட வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தோள்பட்டை காயம்

இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய தோள்பட்டை காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம். 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன ஆழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து