டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
trump advisor 2018 06 12

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நடைபெறும் கிம் ஜோங்வுடனான சந்திப்புக்கு டிரம்பும் செல்லும் வழியில் இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில், தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி குட்லே, திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து