முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மகாலின் பெயரை மாற்றி விடலாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை ஐடியா

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: முகலாய கட்டடக் கலைக்கு உதாரணமாக விளங்கும் தாஜ் மகால் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது,

தாஜ்மகாலை எந்த காரணத்தைக் கொண்டும் இடிக்கக் கூடாது, ஏன் என்றால், அது நமது இந்திய மண்ணில் உருவானது. அதன் பெயரைத்தான் மாற்றி வைக்க வேண்டும். வேண்டுமென்றால் தாஜ்மகாலுக்கு  சிவாஜி மகால் அல்லது ராம் மகால் அல்லது கிருஷ்ண மகால் என பெயர் வைக்கலாம். ஒரு வேளை எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், தாஜ் மகாலுக்கு ராஷ்டிர-பக்த் மகால் என்று பெயர் சூட்டுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக அரசு ஊழியர்களை விட விபச்சாரம் செய்பவர்களே மேல் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியவர்தான் இவர். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை அடித்து நொறுக்குங்கள் என்று உத்தரவிட்டவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து