முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துகளுக்காக ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது இந்தப் பேச்சு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். முதலில் ராகுல் இந்த கருத்தை வாபஸ் வாங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் இந்த வழக்கினை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக ராகுல் உறுதிப்படுத்தினார்.

ஆனால் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பிவண்டி நீதிமன்றத்தில் முதன்முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி ஆஜராகவில்லை. பின்னர் மே மாதம் 2-ந் தேதி விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் காரணமாக ராகுல் காந்தி ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி மும்பைக்கு வருகை தந்தார். காலை 11 மணி அளவில் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து