முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய் நலமாக இருக்கிறார்: நேரில் சந்தித்த வைகோ பேட்டி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி:  வாஜ்பாய் நலமாக உள்ளார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்த பின் தெரிவித்தார்.
 
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவில் மூச்சுத் திணறலும் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாஜ்பாய்க்கு, எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கண்காணிப்பின்கீழ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது என்று பா.ஜ.க. அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வாஜ்பாயை நேரில் சந்தித்தார். பின்னர் அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் உடல்நிலை குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அவர் உடல்நலத்துடன் நன்றாகவே உள்ளார். நான் மதிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து