உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது: வடகொரிய அதிபர்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
KIM 2017 12 31

சிங்கப்பூர்: உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து வடகொரிய அதிபர் கிம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று நடந்த சந்திப்பில் இருவரும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் குறித்து விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சந்திப்பு குறித்து கிம் கூறும் போது, நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நடத்தியுள்ளோம். நாங்கள் கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம். உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது. இந்தச் சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் நன்றி தெரிவித்தேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து