முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய் உடல்நிலை எய்ம்ஸ் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்  திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுவான மருத்துவ சோதனைக்காக வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாஜ்பாய் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து