நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் அரசை மட்டும் குறை கூற முடியாது என்றும் கருத்து

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தமிழகம்
chennai high court

சென்னை:  நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் முன்கூட்டியே அறிவுரை வழங்காமல், மாணவர்கள் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்களின் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

நீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். நீட் மரணத்தை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இதையடுத்து அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 12-ம் தேதி சூரியபிரகாசத்தின் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி சூரிய பிரகாசம் தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட் நேற்று விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. முன்கூட்டியே அறிவுரை வழங்காமல், மாணவர்கள் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்களின் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது எனக் கூறி விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் ஒரு சில மாணவிகள் தேர்வு தோல்வியால் தற்கொலை முடிவுக்கு போய் விடுகிறார்கள். இதை வைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நாடகத்தை அன்றாடம் அரங்கேற்றி கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து