நீர்த்திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      வர்த்தகம்
tamilnadu Eb 2018 05 05

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பருவமழை மேலும் வலுப்பெற்று அணைக்கு நீர்வரத்தும் நீர்த்திறப்பும் விநாடிக்கு 900 கன அடியில் இருந்து 1,150 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டது. இதனால் தினசரி 104 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

மேலும் நேற்று அணையில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டது. இதனால் தலா 26,26,26 மற்றும் 42 என 120 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.லோயர்கேம்ப் பெரியார் நீர் மின் நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் அதிகபட்சமாக தலா 42 மெகாவாட் வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து