ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      வர்த்தகம்
bitcoin

‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் வெளியாகின.


ராஜ் குந்த்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் கிரிப்டோ நாணய மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து