முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணையில் குடிநீர் ஆதாரப் பகுதிகளை தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், வைகை அணை அருகே ஆற்றுப்படுகையிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக குடிநீர் சுத்திகரிக்கப்படும் மையம், கழிவுநீர் அகற்றும் மையம், நீரேற்றும் இடம், குளோரின் கலக்கும் இடம், மதுரை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களுக்கு விவசாயத் தேவைக்காக நீர் பிரித்தனுப்பும் எடுப்பு அணை, இணைப்புக்கால்வாய் பகுதிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
     ஆய்வின்போது, வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விவசாயத் தேவைக்காக தண்ணீரை பிரித்தனுப்பும் எடுப்பு அணை கால்வாய் பகுதிகளையும், ஆற்று வழித்தடப்  பகுதிகளையும், பார்வையிட்டு நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிடவும், சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டப்பகுதிகளில் நீரை சுத்திகரிக்கும் இடம், குளோரினேற்றம் செய்யும் இடம், கழிவு நீரை அகற்றும் இடம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக நீரினை ஏற்றும் இடங்களை பார்வையிட்டு முறையாக பராமரித்து சுத்தமான நீரினை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
     ஆய்விற்குப்பின் தெரிவிக்கையில், தமிழக அரசு தமிழக மக்களுக்கு குடிநீரினை தட்டுப்பாடின்றி வழங்கிடவும், குடிநீர் தேவையினை போக்கிடும் பொருட்டு பல்வேறு கூட்டு குடிநீர்; திட்டப் பணிகளை ஏற்படுத்தி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதனால் ஏராளமான கிராமம் மற்றும் நகர்ப்புறப் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின்படி, வைகை அணைப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டி, சேடபட்டி, தேனி-அல்லிநகரம் நகராட்சி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீரை வழங்குவதற்காகவும், நீராதாரத்தினை ஏற்படுத்துவதற்காகவும், கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீரினை முறையாக சுத்தகரித்து சரியான அளவு குளோரின் கலந்து தரமான குடிநீரினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார். 
    ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்  அசோகன்  , பெரியாறு-வைகை அணை உதவி செயற் பொறியாளர்  .செல்வம்  உதவி பொறியாளர்  .ஆனந்த்   உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து