முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பிற்கு இந்தியா வரவேற்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பை வரவேற்று உள்ள இந்தியா ‘கொரிய தீபகற்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்’ என கூறியுள்ளது.

பேச்சுவார்த்தை
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலம் கனிந்து இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

இந்தியா வரவேற்பு
சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள நிலையில், இந்தியாவும் வரவேற்று உள்ளது. ‘‘சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் வடகொரியா உச்சி மாநாட்டை வரவேற்கிறோம்.

இது ஒரு சாதகமான முன்னேற்றம். கொரிய தீபகற்பத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்யவழியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துகிற எல்லா முயற்சிகளையும் இந்தியா எப்போதும் ஆதரித்து வந்து உள்ளது’’ என இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வழி பிறக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து