Idhayam Matrimony

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 13 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா: வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை ஷாஜகான் பாச்சு  வெளியிட்டு வந்தார்.

5 நபர்கள் ...
இவர் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார். அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திலே...
அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

பொறுப்பு ஏற்கவில்லை
இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து