ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு: கீழ்கோர்ட்டை அணுகும்படி ஐகோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
rajinikanth 2018 5 28

சென்னை, சமூக விரோதி என்று பொதுமக்களை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கீழ் கோர்ட்டை அணுகும்படி பத்திரிகையாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடந்த வன்முறை சம்வத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டனர். போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது, அதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூறினர்.

இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் சிலம்பரசன் என்பவர் புகார் செய்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலம்பரசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓசூர் குற்றவியல் கோர்ட்டை அணுகி மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து