முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா என்று தி.மு.க. எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று அனகா புத்தூர், பொழிச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) துணை கேள்வி எழுப்பினார். அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 400 சதுரடியில் 6 படுக்கை வசதியுடன் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். இதே போல பொழிச்சலூர் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர்.  இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இட வசதியின்றி சிறிய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று தி.மு.க. எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், இ.கருணாநிதி எம்.எல்.ஏ. குறிப்பிடும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இரண்டு முறை பார்வையிட்டேன். உறுப்பினர் சொல்வது உண்மைதான். சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து