முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் புதிய சாலைத் திட்டங்களை தொடங்க மத்திய அரசு முடிவு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாரத் மாலா பரியோஜனா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிள்ளையார் பட்டி வழியாக மேலூர் மற்றும் காரைக்குடி இடையிலான சாலையும், திருமங்கலம் - செங்கோட்டை இடையிலான 151 கிலோ மீட்டர் பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வரையிலான சாலையும் விரிவாக்கப்படுகிறது.

இதே போல் மதுரை முதல் போடி வரையிலான 44 கிலோ மீட்டர் சாலையும், தஞ்சையுடன் திருப்பத்தூரை இணைக்கும் 85 கிலோ மீட்டர் சாலையும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் அதிக அளவில் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து