முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிணைக் கைதிகளாக இருந்த இருவர் மீட்பு - பாரீசில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பாரீஸ் : பாரீஸ் நகரில் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால், சுமார் 4 மணி நேரம் பிணைக் கைதிகளாக இருந்த 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களைப் பிடித்து வைத்திருந்த ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார்.

பாரீஸ் நகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியொன்றில் உள்ள வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. குடியிருப்புகளும், கடைகளும் நிறைந்துள்ள அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் நுழைந்த 26 வயது இளைஞர் ஒருவர், 2 பேரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஓர் அறைக்குள் கொண்டு சென்றார். அவர்களில் ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கப் போவதாக அந்த இளைஞர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை சுற்றி வளைத்தனர். பிறகு அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாரீசில் உள்ள இரானிய தூதரகத்தை தாம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அந்த இளைஞர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடம் கடந்த 2001-ம் ஆண்டு தகர்க்கப்பட்டது முதல் ஆல்பைன் நகரில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வரை பல்வேறு சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர் கேட்டதாக தெரிகிறது. சுமார் 4 மணி நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நீடித்தது.

ஒரு கட்டத்தில் போலீசார் அதிரடியாக அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து அந்த இளைஞரின் பிடியில் இருந்த 2 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், அவர்களைப் பிடித்து வைத்திருந்த இளைஞரை அவர்கள் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து