முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு வர வேண்டும் - டிரம்பின் அழைப்பை ஏற்றார் கிம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் அழைப்பை வடகொரிய அதிபர் கிம் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. அப்போது, வடகொரியாவுக்கு வருமாறு டிரம்புக்கு கிம் அழைப்பு விடுத்ததாகவும், இதுபோல அமெரிக்காவுக்கு வருமாறு கிம்முக்கு டிரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் வடகொரிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரியா, அமெரிக்கா இடையிலான உறவு மேம்பட இந்த பயணம் உதவும் என்பதால், இரு தலைவர்களும் பரஸ்பரம் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து