முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்;டர் ஆலோசணை

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தென்மேற்கு பருவமழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்;டரங்கில் தென் மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்; கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திடும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்காக ஜூன் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை 24 மணிநேரமும் செயல்படும் நிலையில் கட்டுப்பாடு அறையானது அமைக்கப்பட்டு, முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அரசுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும், அவசர கால வாகனங்களில் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.  கடலோர பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல்காப்பக மையங்கள், பள்ளிக்கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் தனியார் கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
 நீர்நிலை புறம்போக்குகள் மற்றும் நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், தேவை ஏற்படும் இடங்களில்  பயன்படுத்தும் பொருட்டு போதுமான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்க பொதுப்பணித்துறை, நகராட்சி அலுவலர், செயல் அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் போதுமான அளவு உணவு தானியங்கள், கோணிப்பைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திடவும், கிட்டங்கியிலும் ஃ நியாய விலைக் கடைகளிலும் இருப்பு நிலவரத்தை தணிக்கை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் ஏற்படக்கூடிய மின்தடையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வானிலை அறிவிப்பிற்கேற்ப மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாகவே கட்டு மரங்கள், படகுகள் ஆகியவற்றை நன்கு பயன்படுத்த கூடிய நிலையில் வைத்திருக்க மீன்வளத்துறை இணை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் விஎச்எப்  மற்றும் எச்எப் கருவிகள் அனைத்தும் பயன்பாட்டில் வைத்து பயன்படுத்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் கடல்சீற்றம் பாதிப்பு மற்றும் மீட்பு உதவி குறித்த தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா அவசரகால தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுலவர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்; மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கா.அண்ணாதுரை  உள்பட  அனைத்து துறை அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து