முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

போபால் : மத்தியப்பிரதேச மாநிலத்தில் 72 வயதில் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.

டைப்-ரைட்டிங்

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் பெண்மணி

இதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து