முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகும் சென்னை பெண்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண் அமெரிக்க கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.

மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா பதவியேற்கவுள்ளார்.

திவ்யா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்து உள்ளார். தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

திவ்யாவின் அனுபவம் மற்றும் அவரது தலைமையின் பல முக்கிய பாத்திரங்கள் தங்களின் நிதி செயல்பாடுகள் முழுவதும் கடந்த பல வருடங்களாக வலுவான வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு மிக நன்றாக அமைந்துள்ளது என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து