முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீதான பொருளாதார தடை உடனடியாக நீக்கப்படாது: அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சியோல்: வடகொரியா மீதான பொருளா தார தடைகள் உடனடியாக நீக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா உறுதியளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரிய தலைநகர் சியோலில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கெனோ, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியங் வா ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் மைக் போம்பியோ நிருபர்களிடம் கூறியதாவது: கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகையை நிறுத்துவது தொடர்பாக தென்கொரியாவுடன் கலந்தாலோசிக்கப்படும். வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்ட பிறகே பொருளாதார தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணு ஆயுதங்களை அழிக்க வேண்டிய அவசியத்தை அதிபர் கிம் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து