பெல்ஜியம் தப்பிச்சென்ற நீரவ் மோடி !

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      வர்த்தகம்
Nirav Modi 16 02 2018

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். முதலில் அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நீரவ் மோடி தற்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் பதுங்கியிருக்க கூடும் என்று ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல், ஒவ்வொரு நாடாக தப்பிச்சென்று வருவதாகவும், பிப்ரவரி மாதம் லண்டனிலும் பின்னர் அங்கிருந்து பாரீஸ், பிரான்சு என சென்று தற்போது பெல்ஜியத்தில் இருக்க கூடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து