முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சான் பிரான்சிஸ்கோ மேயராக கருப்பின பெண் பிரீட் தேர்வு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், சான் பிரான்சிஸ்கோ நிர்வாக வாரியத்தின் தலைவராக உள்ள லண்டன் பிரீட் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் முன்னிலை வகித்த நிலையில், அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்க் லெனோ, ஜேன் கிம் ஆகிய இருவரும் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வதாக அறிவித்தனர்.

அதையடுத்து, லண்டன் பிரீட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சான் பிரான்சிஸ்கோ நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் லண்டன் பிரீட் ஆவார். மேலும், அந்த நகரின் இரண்டாவது பெண் மேயரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து