முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் கொலைக்கு பாக். உளவு அமைப்பே காரணம்: மத்திய அரசு குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.
 
பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி தமது அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் செல்ல தயாரான போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சுஜாத் புஹாரியும், அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். சுஜாத் புஹாரியின் உடல், அவரது சொந்த ஊரான பாரமுல்லா மாவட்டம், கிரிரீ கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் கூறுகையில், ஐ.எஸ்.ஐ-ன் வழிக்காட்டுதலின் படி தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என்றார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான வீடியோ வெளியான சில மணி நேரத்தில் தாடி, வெள்ளை சட்டையுடன் துப்பாக்கியை எடுத்த நபர் தான் ஜுபைர் காத்ரி என்று அடையாளம் கண்டு கொண்ட காவல் துறையினர் அவனை கைது செய்துள்ளனர். சுஜாத் புஹாரியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இரு பாதுகாவலர்களில் ஒருவருடைய கை துப்பாக்கியை ஜுபைர் காத்ரி திருடும் காட்சி விடியோ பதிவாக கிடைத்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து