முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது சவால் விடுகிறார் குமாரசாமி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது. பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்த காங்கிரசும், மூன்றாவது இடம் பிடித்த மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டசபையில் காங்கிரசுக்கு 79 எம்.எல்.ஏ.க்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 எம்.எல்.ஏ.க்களும் உள்ள நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க எதிர்கட்சியான பா.ஜ.க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இது பற்றி முதல்வர் குமாரசாமியிடம், பெங்களூருவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் கூட்டணி நிலையாக உள்ளது. எங்கள் கூட்டணி அரசுக்கு குறைந்தபட்சம் ஒராண்டு வரை எந்த பிரச்சினையும் இல்லை. மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் தொட்டு பார்க்க முடியாது. பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது.

அதுவரை நானும் சும்மா இருக்கப் போவதில்லை. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நற்பெயரை பெறப் போகிறேன். குறிப்பாக விவசாயம் சார்ந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு இயற்கையும் ஒத்துழைப்பு அளிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை சரியான முறையில் பெய்து வருகிறது. எனவே திட்டமிட்டபடி விவசாயத்தை மேம்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து