முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் தகுதி சவால்: தேவகவுடாகிட்ட ஜோடி போட முடியுமா பிரதமர் மோடிக்கு ம.ஜ.த.வினர் கேள்வி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: 86 வயதாகும் தேவகவுடாவிடம் உடல் தகுதியில் பிரதமர் மோடி போட்டி போட முடியுமா என்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பிட்னஸ் சேலஞ்ச் என்ற பெயரில், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி இந்த சேலஞ்சுக்கு ரெடியா என கேட்டிருந்தார். குமாரசாமியோ, மாநிலத்தின் பிட்னஸ் பற்றி தான் அதிகம் கவலைப்படுவதாகவும், அதற்கு பிரதமர் உதவ வேண்டும் என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சில ஆண்டுகள் முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குமாரசாமியை பிட்னஸ் சேலஞ்சுக்கு அழைப்புவிடுத்த மோடி மீது ம.ஜ.த. தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் 86 வயதாகும் தேவகவுடாவிடம் உடல் தகுதியில் பிரதமர் மோடி போட்டி போட முடியுமா என்றும் அக்கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

86 வயதாகும் தேவகவுடா இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். 7 முறை சட்டசபை உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவர் தனது உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பெங்களூரிலுள்ள தேவகவுடா வீட்டில் பிரத்யேக ஜிம் உள்ளது.

கார்த்திக் என்பவர் தேவகவுடாவின் பயிற்சியாளராக உள்ளார். இதுபற்றி தேவகவுடா கூறுகையில், எனக்கு மது, புகை பழக்கம் கிடையாது. அளவாக வெஜிட்டேரியன் உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறேன். அதிகம் தூங்க மாட்டேன். காலையிலேயே விழித்து விடுவேன். எனக்கு பேராசை எல்லாம் கிடையாது. இதெல்லாம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், அவர் செய்யும் உடற் பயிற்சிகள் மிகவும் சாதாரண வகையில் இருந்தன. இதனால் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வீடியோ, மீம்ஸ்கள் உலவத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து