முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு சிறுவனுக்கும், குட்டி யானைக்கும் இடையேயான நட்பை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி வருவதாக இயக்குநர் கூறியிருக்கிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - லஷ்மி மேனன் நடிப்பில் உருவான `கும்கி' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு முதல் உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் பேசும் போது,

கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்றார். ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2 படத்தின் கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கவில்லை, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக கும்கி 2 இருக்கும்.வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன். இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து