முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ் அப் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது செல்லும்: மும்பை ஐகோர்ட்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: வழக்குத் தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினாலும், அது செல்லும் என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வழக்குத் தொடர்பாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் செய்திக்கு நீல நிற டிக் மார்க் வருவதே, நோட்டீஸ், சம்பந்தப்பட்டவருக்கு சென்று சேர்ந்ததற்கான ஆதாரம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கில், ரோஹித் ஜாதவ் என்பவர் கடன் அட்டை பெற்று அதில் ஒரு லட்சத்துக்கும் மேல் கடன் நிலுவையில் வைத்திருந்தார். அவரது வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பிய வங்கி அதிகாரிகள், அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் நோட்டீஸை பி.டி.எப். வடிவில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, நான் வீடு மாறி விட்டதால் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று ஜாதவ் கூற, வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் சென்று சேர்ந்ததற்கான டிக் மார்க்குகளை சாட்சியமாகப் பதிவு செய்தார். அதோடு, அதனை திறந்து படித்ததற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, சட்டப்படி, வழக்கு தொடர்பான நோட்டீஸ் நேரிலோ தபாலிலோ அனுப்பப்படும். ஏற்கனவே, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, வாட்ஸ் அப் மூலம் லீகல் நோட்டிஸ் அனுப்புவதும் செல்லும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து