முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதமான காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் தென் தமிழக கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 3 மீட்டர் வரை எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் உக்கிரமாக இருந்தாலும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து