முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துமீறி தாக்குதல்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் நவுசேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்கியதில் ராணுவ வீரர் பிகாஸ் கரூங் என்பவர் வீரமரணம் அடைந்தார். முன்னதாக அர்னியா செக்டார் பகுதியில் நேற்று காலை 4 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இளைஞர் ஒருவர் பலி

இதற்கிடையே, ஸ்ரீநகரில் ரம்ஜான் தொழுகைக்கு பிறகு பாகிஸ்தான் ஆதாரவாளர்கள் சிலரும், ஐ.எஸ் பயங்கரவாத இயக்‍க கொடியுடன் வன்முறைக் கும்பல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்‍குதலில் ஈடுபட்டது. இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதினர். இதையடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதனால், அந்த இடமே போர்க்‍களம் போல காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்திற்கு பின் எல்லைப் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. இதனிடையே, ரம்ஜானை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத சண்டை நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து